செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : வியாழன், 16 ஏப்ரல் 2020 (15:02 IST)

தமிழகத்தில் மேலும் 25 பேர் கொரோனாவால் பாதிப்பு : 180 பேர் நலம் பெற்றனர் – முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் மேலும் 25 பேருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது :

கொரோனா நோய் தடுப்பு பணிக்கு அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அதில், அனைத்து தரப்பினரின் கருத்துக்களை கேட்ட பிறகே ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது, அரசின் தீவிர நடவடிக்கையால் நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில்  மேலும் 25 பேருக்கு கொரொனா தொற்று   உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1267ஆக உயர்ந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 
மேலும், இதுவரை 180 பேர் தமிழகத்தில் குணமடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.

 
மேலும், மாவட்ட அளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றி ஆட்சியர்களிடம் கேட்டறிந்தாகவும், இந்தியாவிலேயே தமிழகம்தான் முன்னெச்சரிக்கையாக மருத்துவ உபகரணங்களை வாங்கி வைத்துள்ளதாகவும்,  இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்துவிடும் என  முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.